வீட்டில் தொழுகை நடத்திய விவகார முரண்பாடு - 17 பேரை நீதிமன்றம் விடுவித்தது
(இக்பால் அலி)
அக்குரணை நிரேல்லைப் பிரதேசத்தில் வீடொன்றில் கொள்கை முரண்பாடு காரணமாக தொழுகை நடத்தி வந்த அணியினரை கடந்த வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகை முடிந்த பிற்பாடு வீடு சென்று கொண்டிருந்த வேளையில் அதற்கு எதிரான மாற்றுக் கொள்கையுடைய அணியினர் அங்கு சென்று தாக்குதல் நடத்திய சம்பத்தில் இரு தரப்பைச் சேர்ந்த ஆறு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 17 நபர்களையும் இன்று புதன்கிழமை எடுத்துக் கொண்ட வழக்கு விசாரணையின் பொழுது கண்டி மஜிஸ்ரேட் நீதிவான் விடுதலை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தச் சம்பத்தில் இரு தரப்பைச் சேர்ந்த ஆறு பேர் காயப்பட்டுள்ளனர். நான்கு பேர் அக்குரணை சியா மாவட்ட வைத்தியசாலையிலும் மற்றும் இரண்டு பேர் கண்டி பிரதான வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் காயப்பட்ட யாவரும் உடல் நலம் தேறியதன் பிற்பாடு வைத்தியசாலையின் அனுமதியினை விலக்கிக் கொண்டதன் காரணமாக இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் செல்ல நீதவான் தீர்ப்பினை வழங்கினார்.
இந்தச் சம்வம் குறித்து நீதி மன்றத்தில் பெருந் தொகையான மக்கள் கொள்கை முரண்பாட்டாளர்கள் கூடி நிற்பதைக் காணக் கூடியதாக இருந்தன.
நீரல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசலிலிருந்து கொள்கை முரண்பாடு காரணமாக 50 மீட்டர் தூரத்தில் ஒரு வீடொன்றில் தொழுகை நடத்தி வந்தனர். அக்குரணை சுற்றுவட்டத்தைச் சேர்ந்த 40 பேர் அளவில் ஜும் ஆத் தொழுகைக்கு இங்கு வருகை தருவார்கள். இதற்கு எதிரான எதிர் தரப்பினரால் கடந்த காலங்களிலும் பல பிரச்சினைகள் எழுந்ன. காலப் போக்கில் ஒரு சுமூகமான நிலைக்குத் திரும்பியிருந்தன. அதனை தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளன. தற்போதுள்ள நாட்டின் இக்கெட்டான கால சூழ்நிலையில் இவ்வாறான சம்வங்கள் நிகழ்வது மனவேதனையையும் வேட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவாக உள்ளதென அக்குரணை மக்கள் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.
சூரா அல் பகரா.8 முதல் 12 வரை குர்ஆன் எச்சரிப்பதை இலகுவாக புரிய முடியும் முஸ்லிம்களே சற்று சிந்தியுங்கள்.
ReplyDelete