துருக்கியில் கெஹிகெப்டர் விபத்து - 17 இராணுவத்தினர் மரணம்
துருக்கி நாட்டின் தென் கிழக்கில் உள்ள சீர்ட் பகுதியில் குர்திஷ்களுக்கு எதிராக ராணுவத்தினர் சண்டையிட்டு வருகின்றனர். மலைப் பகுதியான இங்கு துருக்கியின் சிறப்பு படையை சேர்ந்த 17 பேர் ஹெலிகாப்டரில் ராணுவ முகாமிற்கு சென்றனர்.
அப்போது வானம் மிகவும் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் ஹெலிகாப்டர் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அனைத்து ராணுவ வீரர்களும் இறந்துவிட்டனர்.
இந்த விபத்தின் பின்னணியில் குர்திஷ்கள் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Post a Comment