Header Ads



குளவிகளின் தாக்குதல் - 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி (படங்கள் இணைப்பு)


(அனா)

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இன்று (03.11.2012) குளவி கொட்டுக்குள்ளாகிய 17 பேர்  ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர்; ஏ.சி.எம்.ஏ.பழில் தெரிவித்தார்.

ஏறாவூர் மீராகேணி வீதியில் பனை மரமொன்றிலிருந்த மட்டைகள் விழுந்துள்ளதையடுத்து குளவிகள் கலைந்து வீதியால் சென்றவர்களை கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குளவிக்கொட்டுக்குள்ளானவர்களுக்கு கடும் வலி மற்றம் வீக்கம் ஏற்பட்டுள்ளது. கருங்குளவி இனத்தைச் சேர்ந்த குளவிகளே கொட்டியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

5 சிறுவர்கள் அடங்கலாக 17 பேர் இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களை வைத்தியசாலைக்குச் சென்று ஏறாவூர் நகரசih உப தவிசாளர் எம்.ஐ.எம்.தஸ்லீம் நேரில் சென்று பார்வையிட்டதுடன் ஆறுதல் கூறினார்.





No comments

Powered by Blogger.