அரச ஊழியர்களுக்கு 1500 ரூ அதிகரிப்பு, வேலையற்ற 65 வயது மேற்பட்டவருக்கு 5000 ரூ.
(எம்.ஜே.எம். தாஜுத்தீன்)
வாகன இறக்குமதி வரி 10-20 வீதம் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 10-20 வீதம் வரை அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
மதுபான இறக்குமதி தீர்வை வரி 25% அதிகரிப்பு
வெளிநாட்டு மதுபான இறக்குமதி தீர்வை வரி 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு 1500 ரூபா அதிகரிப்பு
அரச ஊழியர்களின் கொடுப்பனவை 1500 ரூபாவால் அதிகரிக்க ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைத்துள்ளார். அத்துடன் அரச, தனியார் ஊழியர்களின் சம்பள நிலை குறித்து ஆராய புதிய சம்பள ஆணைக்குழு ஒன்றை அமைக்கவும் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்றிணையுமாறு எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண ஒன்றிணையும்படி ஐதேக, ததேகூ மற்றும் ஜேவிபி தலைவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். வரவு செலவு திட்ட உரை நிகழ்வின்போது இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
65 வயதுக்கும் மேற்பட்ட வேலையற்றோருக்கு மாதாந்தம் 5000 ரூபா
65 வயதிற்கும் மேற்பட்ட நிலையில் தொழில் இன்றி இருப்போருக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
Post a Comment