யாழ்ப்பாணத்தில் 15 ஆவது ஆளுநர்கள் மாநாடு (படங்கள்)
15வது ஆளுநர்களின் மாநாடு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிறந்த தின நிகழ்வினை முன்னிட்டு தேசிய மரம் நடுகைத் நிகழ்ச்சிச் திட்டத்தின் கீழ் ஆளுநர்கள் மரக்கன்றுகளை நாட்டினார்கள்.
ஆளுநர்கள் வரவேற்பு பாடல் மற்றும் வரவேற்பு நடனம் ஆகியவற்றுடன் மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். தொடர்ந்து நடனக்குழுவினரை பாராட்டி ஆளுநர்கள் பரிசில்கள் வழங்கினார்கள். அடுத்து வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து 14வது ஆளுநர் மாநாட்டின் தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அல்ஹாஜ்.எஸ்.அலவி மௌலானா விசேட உரையாற்றினார். அதனை தொடர்ந்து தலைமைப் பொறுப்பினை வட மாகாண ஆளுநரிடம் கையளித்தார்.
தேனீர் இடைவேளைக்கு முன்பதாக நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. 15வது ஆளுநர் மாநாட்டு நினைவுப் பதிவு, செயற்பாடுகளின் சிறப்புக் கூறல் – ” வடக்கின் வசந்தம்” , வட மாகாணத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், சுற்றுலாத்துறை தொடர்பான இறுவட்டு என்பன வெளியிட்டு வைக்கப்பட்டது.
மேல் மாகாண ஆளுநர் கௌரவ அல்ஹாஜ் எஜ்அலவி மௌலானா, ஊவா மாகாண ஆளுநர் கௌரவ சி.நந்தா மத்தியூ, வட மத்திய மாகாண ஆளுநர் கௌரவ கருணாரட்ண டிவுல்கனே, மத்திய மாகாண ஆளுநர் கௌரவ ரிக்கிரி கொப்பேகடுவ, கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ மொஹான் விஜயவிக்கிரம, தென் மாகாண ஆளுநர் கௌரவ குமாரி பாலசூரிய, வட மேல் மாகாண ஆளுநர் கௌரவ திஸ்ஸ ஆர். பலல்ல, வட மாகாண ஆளுநர் கௌரவ ஜஏ.சந்திரசிறி, சப்பிரகமூவ மாகாண ஆளுநர் கௌரவ டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார, ஆளுநர்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
Post a Comment