யாழ்ப்பாண முஸ்லிம்கள் விரட்டப்பட 13 ஆவது திருத்தமே காரணம் - அமைச்சர் சம்பிக்க
கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை அமைச்சர் விமல் வீரவன்சவுடன் இணைந்து அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு
வடக்கில் விடுதலைப்புலிகளுக்காகவே அவர்களது ஆயுதங்களை கீழே வைப்பதற்காகவே ஜே.ஆர் இந்த சட்டத்தை கொண்டுவந்தார். ஆனால் விடுதலைப்புலிகள் ஆயுதத்தை கையளிக்கவில்லை. மாறாக வெளிநாட்டுப்படை கொண்டுவரப்பட்டது. 66 ஆயிரம் பேர் இச் சட்டத்தின் பின் இறந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 29 ஆயிரம் சிங்கள மக்களும் 32ஆயிரம் முஸ்லீம் மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
வடக்கில் மகாணசபை என்ற தேர்தல் நடைபெறக்கூடாது. அண்மையில் கொண்டுவரப்பட்ட திவிநகும சட்டம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது மீயு உயர்நீதிமன்றம் 9 மாகாண சபைகளிலும் இச் சட்டம் கொண்டு வரப்படல் வேண்டும். வடக்கில் மாகாணசபை தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் ரீ.என்.ஏ ஆட்சிக்கு வரும். இதன்பின்னர் இந்த நாட்டில் எந்தவொரு சட்டத்தையும் நாம் அமுல்படுத்த முடியாது. அதற்கு வடக்கு மாகாணசபை தடையாக இருக்கும். வடக்கில் ரீ.என்.ஏ பொலிஸ், இடம் அதிகாரங்களையும் ; கொண்டுவந்து வடகிழக்கை இணைத்து பெட்ரல் ஆட்சியை கொண்டு வந்துவிடுவார்கள் அதன் பின் இந்த நாட்டினை ஒரு பிரிவினைவாதற்கும் தணி ஈழம் அமைப்பதற்கும் நாமே வழியமைத்துக் கொடுப்பது போன்றதாகும் அதற்காகவே இரு கட்சிகளும் இணைந்து இதனை தடுக்க முன்வந்துள்ளோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தர்.
Post a Comment