Header Ads



பலஸ்தீன் நாட்டு இறைமையை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது - 136 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் தொடர்பாக, ஐ.நா.,வில் நடந்த ஓட்டெடுப்பில் அமெரிக்கா, ஜெர்மன், இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்தன.

ஐ.நா., சபையில் மொத்தமுள்ள, 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட, 136 நாடுகள் அதன் இறையாண்மையை அங்கீகரித்து உள்ளன.

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஓட்டளித்து உள்ளன.ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தால், பாலஸ்தீனம், சுதந்திரநாடாக அறிவிக்கப்பட்டு விட்டதாகக் கருத முடியாது.

பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் நீண்ட காலமாகப் பகை நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தை, தனி நாடாக அங்கீகரிக்கக் கோரி போராடியவர், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அராபத். இவரது முயற்சியால் பாலஸ்தீனம் தனி நாடானது. 

இருப்பினும்  ஐ.நா., சபையால் இன்னும் அங்கீகரிக்கப்படாமல் உள்ளது. ஐ.நா., சபையால் தனி நாடாக அங்கீகரிக்கப்படாததால், ராணுவம் அமைப்பது, ஆயுதங்களை வாங்குவது, எல்லைகளை வரையறுப்பது போன்ற காரியங்களை, பாலஸ்தீனத்தால் செய்ய முடியவில்லை.


Palestine has won the vote to become a non-member observer state by 138 Yes to 9 No.
There were 41 countries that did not vote.







1 comment:

  1. Alhamdu lillah, freedom is very close insha ALLAH.71

    ReplyDelete

Powered by Blogger.