13வது திருத்தத்தை அகற்றும் திட்டம் இல்லையென்பதை பீரிசிடம் இருந்து உணரமுடிந்தது
சில தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வருகின்ற போதிலும், அரசியலமைப்பில் இருந்து அரசாங்கம் 13வது திருத்தத்தை அகற்றும் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை, ஜி.எல்.பீரிசிடம் இருந்து என்னால் உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது” என்றும் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் குர்கான் நகரில் இடம்பெற்ற இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் 12வது வெளிவிவகார அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் கலந்து கொண்டார்.
“பேராசிரியர் பீரிஸ் ஒக்ஸ்போர்ட்டில் எனக்கு மூத்தவராக இருந்தார். இருந்தபோதிலும் நாங்கள் இருவரும் முதல்முறையாகச் சந்தித்துள்ளோம். ஒக்ஸ்போர்ட்டில் கல்வி கற்ற நாம் ஒரே வகையான மொழியில் (தொனி) பேசினோம், ஒருவரை ஒருவர் நன்றாகவே புரிந்து கொண்டோம். சில தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வருகின்ற போதிலும், அரசியலமைப்பில் இருந்து அரசாங்கம் 13வது திருத்தத்தை அகற்றும் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை, ஜி.எல்.பீரிசிடம் இருந்து என்னால் உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது” என்றும் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார்.
Post a Comment