13 க்கு பதிலாக வருகிறது 19 - மஹிந்த சகோதரர்களின் அதிரடி திட்டம்
தற்போதுள்ள மாகாணசபைகளுக்குப் பதிலாக அதிகாரப்பகிர்வுத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் அரசியலமைப்பில் 19வது திருத்தத்தை கொண்டு வரவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“இந்தத் திருத்த வரைபு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும். தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை சேரவில்லை. அதற்கு காலஅவகாசம் கொடுப்போம். அவர்கள் இணைந்து கொள்ளாது போனால், நாம் முன்னே செல்ல வேண்டியிருக்கும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக, தற்போதுள்ள 13வது திருத்தத்துக்கு பதிலீடாக 19வது திருத்த முன்மொழிவு அமையும்.
ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் 13வது திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற பரப்புரைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை, வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, மக்களுக்கு அர்த்தமுள்ள கூடுதலான அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கு மாகாணசபை முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தநிலையில், பசில் ராஜபக்சவும் 19வது திருத்தத்தை கொண்டு வருவது குறித்து கருத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment