முஹம்மது முர்ஸிக்கு எதிராக 12 வழக்குகள்
எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தின் மூலம் அகற்றப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலுக்கு பிறகு சகோதரத்துவ கட்சியை சேர்ந்த முகமது முர்சி புதிய அதிபர் ஆனார்.
அங்கு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டதை தொடர்ந்து புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த நிலையில் எகிப்தில் அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதை அதிபர் முர்சி தனக்குதானே ஏற்படுத்தி அறிவித்தார்.
இதனால் எகிப்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. அதிபர் முர்சி அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்துக் கொள்ள விரும்புகிறார். இதனால் மீண்டும் சர்வாதிகார ஆட்சி ஏற்படும். எனவே, இந்த சட்டத்தை உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் உள்ள தக்ரீர் சதுக்கத்தில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் முர்சியின் சகோதரத்துவ கட்சி அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அக்கட்சி அலுவலகம் தீவைத்து கொளுத்தப்பட்டது. இந்த நிலையில், டாமான்ஹவரில் உள்ள சகோதரத்துவ கட்சி அலுவலகம் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இஸ்லாம் பதாய் மசூத் என்ற தொண்டர் உயிரிழந்தார். 60 பேர் காயம் அடைந்தனர்.
இருந்தும் எகிப்தில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருகிறது. அதிபர் முர்சிக்கு எதிரான போராட்டத்தில் நீதி துறையினரும் களம் இறங்கியுள்ளனர். நீதிபதிகள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
எனவே, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சட்டத்துறை மந்திரி அகமது மெக்சி ஈடுபட்டார். அதிபரின் இந்த அறிவிப்பு தற்காலிகமானதுதான் என்றார். இருந்தும் போராட்டம் ஓயவில்லை.
இதற்கிடையே அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தை எதிர்த்து கோர்ட்டில் 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதன் மீதான வழக்கு விசாரணை வருகிற டிசம்பர் 4-ந்தேதி வருகிறது. அன்று அதிபருக்கான கூடுதல் அதிகாரம் செல்லுமா? என்பது தெரிய வரும்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்}அவர்கள் எங்களிடம் எனக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் முன்னுரிமை வழங்க படுவதையும் நீங்கள் வெறுக்கிற சில விடயங்களையும் பார்ப்பீர்கள் ,என்று சொன்னார்கள் ..மக்கள் அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளை இடுகிறீர்கள் அல்லாஹ்வின் தூதரே
ReplyDeleteஎன்று கேட்க நபி{ஸல்}அவர்கள் {ஆட்சியாளர்களான}அவர்களுக்கு அவர்களது உரிமையை வழங்கிவிடுங்கள் ,உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்.என்று சொன்னார்கள்..புஹாரி இல..7052 ...எவர் தமது ஆட்சியாளரிடம் ஏதும் குறைகளை கண்டு வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும்.ஏனனில் கட்டுப்படாமல் அவரிடமிருந்து ஒரு சான் அளவு வெளியாகிராரோ அவர் ஜகிலிய கால மரணத்தை தழுவுவார்...புஹாரி ..7053 ...7054 ..
மேற்படி ஹதீஸ்கள் ஒரு முஸ்லிம் ஆட்சியை எப்படி அமைக்க வேண்டும் என்பதை தெளிவாக சுட்டி காட்டுகிறது.
ஜனநாயக ஆட்சி வெற்றி பெறாது என்று முதல் ஒரு தடவை கமெண்ட் செய்த போது அதை விமர்சனம் செய்த rinasmohamad தெரிந்து கொள்ளவேண்டும்.மேலும் ஜனநாயகம் ஒரு வழிகேட்டு அமைப்பு முறை அதை படிக்கல்லாக வைத்து கிலாபாத்த்தை காண முடியாது .