Header Ads



பங்காதேஷில் ஆடை தொழிற்சாலையில் தீ - 124 பேர் மரணம் (வீடீயோ)



வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு அருகேயுள்ள பல மாடி கட்டடத்தில் இயங்கி வந்த ஜவுளி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 124 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நேற்று மாலை ஏற்பட்டது. மாடியில் பல தொழிலாளர்கள் மாட்டிக்கொண்டதால், பலர் பலியானார்கள். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். கீழ்தளத்தில் பற்றிய தீ மளமளவென மாடிக்கும் பரவியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்களும் ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.



No comments

Powered by Blogger.