வெலிக்கடை சிறையில் குழப்பம் 12 பேர் பலி, 35 பேர் காயம், கைதிகளும் தப்பினர்
வெலிக்கடை சிறைச்சாலையில் எழுந்துள்ள பதற்றத்தை தடுக்க இராணுவத்தினர் தலைமையில் விசேட நடவடிக்கை ஒன்று தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்தே இந்த விசேட முன்னெடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது உயிரிழந்த 12 பேரின் சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
அத்துடன், இதுவரையில் 35பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இராணுவத்தினர் இந்நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அதேவேளை, சிறைச்சாலையின் பின்னால் அமைந்துள்ள மதிலொன்று உடைக்கப்பட்டு சிறைக்கைதிகளில் பலர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment