Header Ads



சர்வதே அளவில் டொப் 10 குற்றவாளிகள்


பொதுவாக நம் நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, பண மோசடி, விபசாரம் போன்ற குற்றங்கள் பற்றியும், குற்றவாளிகள் பற்றியும் நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் சர்வதேச உளவுத்துறை போலீசாரின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டும் ‘மாஸ்டர் மைன்டட் கிரிமினல்கள் பற்றியும், க்ரைம் ரெக்கார்டுகள் பற்றியும் நீங்கள் அறிவீர்களா? இதோ அவர்கள் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு.

உலகில் அதிக எண்ணிக்கையிலான கைதிகளைக் கொண்டிருப்பது அமெரிக்காதான். கிட்டத்தட்ட 23 லட்சத்து 10 ஆயிரத்து 984 கைதிகள். அடுத்ததாக சீனாவில் சுமார் 15 லட்சத்து 65 ஆயிரத்து 771 கைதிகளும், ரஷியாவில் சுமார் 8 லட்சத்து 84 ஆயிரத்து 523 கைதிகளும் உள்ளனர். அடுத்ததாக பிரேசிலும், அதற்கு அடுத்ததாக 5-வது இடத்தில் இந்தியா சுமார் 3 லட்சத்து 73 ஆயிரத்து 271 கைதிகளைக் கொண்டுள்ளது.

எப்.பி.ஐ. எனப்படும் (ஃபெடரல் பியூரா ஆஃப் இன் வெஸ்டிகேஷன்) சர்வதேச உளவுத்துறை நிறுவனம் தனது 'மோஸ்ட் வான்டட்' லிஸ்டில் வைத்திருக்கும் 'டாப் 10' கிரிமினல்கள் பற்றிப் பார்க்கலாம்.

முதலாவதாக, 'டொனால் யூஜின்' என்ற குற்றவாளி உள்ளான். இவன் அதிகமான நபர்களைக் கொலை செய்து இருக்கிறான். அடுத்ததாக மக்களை மிரட்டிக் கொள்ளையடிக்கும் 'விக்டர் மேனுவல்' என்ற குற்றவாளி உள்ளான். முக்கியமான வி.ஐ.பி.க்களை கொலை செய்த குற்றத்திற்காக 'சார்லஸ்-லீ-ஹரான்' என்ற குற்றவாளி மூன்றாவது இடத்தில் உள்ளான்.

 எப்.பி.ஐ. இந்தப் பிரபலமான 'டாப் 10' லிஸ்ட்டை 1950-ல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது.

இன்று வரை 500-க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிமினல்களின் பெயர்களுடன் இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை அல்லது தகுந்த தண்டனை கிடைக்கும் வரை குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் இடம் பெறும்.

சர்வதேச அளவில், எஃப்.பி.ஐ.யினால் மோஸ்ட் ஆஃப் தி 'மோஸ்ட் வான்டட்' என அறிவிக்கப்பட்டிருக்கும் குற்றவாளி விக்டர் ஜெரினா என்பவன்தான். இவனது தலைக்கு எஃப்.பி.ஐ. அறிவித்துள்ள சன்மானம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை. ரூ.5 கோடியே 50 லட்சம் (1 மில்லியன் டாலர்கள் மட்டுமே).

1 comment:

  1. அப்ப இந்தியா அடுத்த வல்லரசு

    ReplyDelete

Powered by Blogger.