Header Ads



முஸ்லிம் தரப்பினரிடையே மோதல் - புதிய பள்ளிவாசல் அடித்து உடைப்பு - 10 பேர் காயம்


(இக்பால் அலி)

ரிதிகம பிரதேச பொலிஸ் பிரிவில் தெலும்கொல்ல பிரதேசத்தில்  இன்று வெள்ளிக்கிழமை ஒரு மணி அளவில் புதிய பள்ளி என்ற பெயரில் ஆரம்பித்து தொழுகை நடத்தி வந்த அணியினரை  சுமார் 60 பேர் கொண்ட குழுவினர் பள்ளியினை அடித்து உடைத்துள்ளதுடன் அங்கிருந்த நபர்களைத் தாக்கியுள்ளதால் 10 பேர் அளவில்  காயத்திற்குள்ளாகி குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் மற்று ரிதிகம மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பழைமைவாயந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் முரண்பட்டுக்  கொண்டு பிரிந்த சென்ற அணியினர் புதிய ஜும்ஆப் பள்ளிவாசலை ஆரம்பித்ததுடன் நீதி மன்றத்தில் இரு சாராருக்கிடையே இது குறித்த வழக்குத் தொடரப்பட்டது.  நீதி மன்றம் புதிய பள்ளிவாசலைச் சார்ந்த குழுவினருக்கு தொழுகையை மேற் கொள்ளுமாறு  தீர்ப்பு வழங்கினர் இதனை அடுத்து புதிய பள்ளியில் இந்த அணியினர் தொழுகையை மேற் கொண்டவந்தனர் எனவும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை ரிதிகம பொலிஸார் மேற் கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.



1 comment:

  1. Separatist are considered as gone away from religion. Muslim ummah should be united always. For small petty differences poeple can not go solo and open another Place of Worship. This is how hawarijins started during the period of Khalifah Ali (Rali)and which have lead to more than four groups of zia. Later division among them has caused to more than fifty zia units.
    We should not allow any group to go astray from the united ummah.They will be punished severely by Allah on the Day of Judgement. Please brothers understand islam is getting renaissance gradually. compared to 1950s we are following islam in a best way. No more argument. But tell your opinions with evidences. Discuss with ulamas and islamic scholars. If ulamas are wrong provide them more evidence and listen to their opinion also. Please do not fight or go separate for misconception in ISLAMIC teachings. Prophet said to Sahabas ' If you abandon one tenth of my sunna you will go astray in the wrong path. Later generation who follow one tenth of my sunna , they will be in the right path'

    ReplyDelete

Powered by Blogger.