Header Ads



புதிய 1000 ரூபா நாணயக்குற்றி வருகிறது



(TM)

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை வெளியிடவுள்ளது. 

இராஜதந்திர உறவின் வைர விழா நிறைவாக வெளியிடப்படவுள்ள இந்த நாணயக்குற்றியின் முகப்பு பக்கத்தில் மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் அணைக்கட்டின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. புதிய நாணயக்குற்றி 35.0 மில்லிமீற்றர் விட்டமும் 22.0 கிராம் நிறையையும் கொண்டது.

இராஜதந்திர உறவினை நினைவு கூறும் வகையில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் 57 ஆவது  ஞாபகார்த்த நாணயமாகும். 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைப்பார் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.