இனவெறியனுடன் கைகுலுக்கியது பிரிட்டன்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் ஜேம்ஸ் பெவன் இன்று சந்தித்து பேசினார். இதையடுத்து, 10 ஆண்டுகளுக்குப்பிறகு குஜராத்துடனான தனது உறவை பிரிட்டன் புதுப்பித்துக்கொண்டுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரத்துக்குப்பின், குஜராத்துடனான உறவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் முறித்துக்கொண்டன. இக்கலவரத்தில், குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த 3 இங்கிலாந்து வாசிகள் கொல்லப்பட்டனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க விசா அளிக்க மறுத்து விட்டது.
இது ஒருபுறம் இருக்க, பிரிட்டனை தாங்கள் பின்பற்றப்போவதில்லை என ஜெர்மன் மீண்டும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்த இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர், தேர்தலுக்கு முன்பாக, குஜராத்துடனான தங்களது நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்திருந்தார்.
குஜராத்துடன் பிரிட்டன் நெருங்கிய உறவுகளை மேம்படுத்த விருப்பம் தெரிவித்திருப்பது, 2002ம் ஆண்டு நடந்த கலவரத்துக்குப்பின் தனித்து விடப்பட்டிருந்த மோடிக்கு, அரசாங்க ரீதியில் மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது. இதுவரை விசா மறுத்து வந்த அமெரிக்காவும் தற்போது விசா தர முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் இந்த முடிவு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த மோடி, இல்லாமலேயே போவதற்கு தாமதம் சிறந்ததே என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய பிரமருக்கு தெரியாத குஜராத்தின் மதிப்பு, பிரிட்டனுக்கு தெரிந்திருக்கிறது என்று பன்ச் கொடுத்துள்ளார்.
Post a Comment