வன்செயலற்ற தின நிகழ்வு (படங்கள் இணைப்பு)
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
மகாத்மா காந்தியின் 143வது நினைவுதின சொற்பொழிவும் வன்செயலற்ற தினமும் நிகழ்வு கொழும்பு கொம்பனித்தெரு நிப்பன் ஹோட்டலில் தேசிய கல்வி ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக இலங்கையின் இந்திய தூதரகத்தை சேர்ந்த கல்விக்கான இரண்டாவது செயலாளர் ஸ்ரீ டினேஸ் உடேனிஜா கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக முன்னாள் அமைச்சர் பி.பி.தேவராஜ், புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர்கள் கலந்து கொண்;டனர். இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி தலைவர் அ.முத்தப்பன் செட்டியர் மற்றும் சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து ஆகியோர்கள் இதனை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
Post a Comment