உற்பத்திகளை சந்தைப்படுத்த உழைப்பு பிரதானமானது - அமைச்சர் றிசாத்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கையின் துாய கருவாயினை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் மேலும் புதிய ஆறு நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக கைத்தொழில்இவணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் அதிகரிப்பை காட்டுவதாகவும் அவர் கூறினார்.
கொழும்பு காலிமுக ஹோட்டலில் இடம்பெற்ற கருவா உற்பத்தியாளர்களின் மாநாட்டுடன் கூடிய எதிர்கால செயற்பாடுகள் பற்றிய செயலமர்வில் பிரதம உரையினை ஆற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
பொருளாதார அபிவிருத்தி பஷில் ராஜபக்ஷ, கைத் தொழில்இவணிகத் துறை பிரதி அமைச்சர் ஜயர்த்ன ஹேரத், அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தனஇமற்றும் யுனிடோ அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளார் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றும் போது-
இன்று எமது ஏற்றுமதி துறையில் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்துள்ளோம்.அதனை முகம் கொண்டு அதற்கான மாற்று வழிகளையும் நாம் அடையாளப்படுத்தியுள்ளோம்.இதற்கென விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று எமது நாட்டின் உற்பத்திகளை சர்வதேச சந்தைகள் விருப்பி கொள்வனவு செய்யும் நிலை உருவாகியுள்ளது.அதற்கு எமது உழைப்பு இன்றியமையாததொன்றாகும். என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment