சூழலை பாதுகாக்க வருகிறது புதுவகை ஜீன்ஸ்
ஜீன்ஸ் பேண்ட்கள் மிகவும் முரட்டுதனமானவை. அழுக்கு படிந்தாலும் தெரியாது. எனவே அதை பலரும் விரும்பி அணிகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே தற்போது சுற்றுச்சூழல் பாதிக்காத புதுவித ஜீன்ஸ் பேண்டுகளை தயாரித்துள்ளனர். இவற்றை பேராசிரியர் டோனி கியான், பேஷன் டிசைனர் ஹெலன்ஸ்டோரே ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.
ஜீன்ஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் முரட்டுத்தனமான பருத்தி துணியின் மீது டைட்டானியம் டை ஆக்சைடு என்ற உறுதியற்ற உலோகத்தை பூசியுள்ளனர். இது காற்று மற்றும் ஒளியில் கேடு விளைவிப்பவைகளை வெளிப்படுத்தும் தன்மை உடையது.
அதன் அடிப்படையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் அழுக்குகள் ஜீன்ஸ் மீது படியாது. மேலும் சலவை செய்யும்போது மிகவும் எளிதாக சுத்தமாகிறது.
இதன் மூலம் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுகிறது. நச்சு வெளிப்பாடுகளால் உலக அளவில் ஆண்டுதோறும் 13 லட்சம் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அதில் இருந்து மக்களை காக்க புதுவித ஜீன்ஸ் பேண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
Post a Comment