Header Ads



பலஸ்தீனர்களுக்கு உதவச்சென்ற மேற்குநாட்டு கப்பலை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தடுத்துநிறுத்தியது



காசா நிலப்பரப்புக்கான நுழைவாயிலில் இஸ்ரேல் ஏற்படுத்திவைத்துள்ள தடைகளையும் மீறி உள்ளே நுழைய முற்பட்ட படகை இஸ்ரேலிய படையினர் தடுத்துள்ளனர். பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துவரும் செயற்பாட்டாளர்கள் இந்தப் படகில் பயணித்துள்ளனர்.

காசா நிலப்பரப்புக்குள் படகுகள் நுழையாதபடி இஸ்ரேல் போட்டிருக்கின்ற தடைகளையும் மீறி படகு பயணிக்க முற்பட்டபோது, உள்ளே வரக்கூடாது என்று பல தடவைகள் அறிவித்தல் விடுத்தும் படகில் இருந்தவர்கள் அதனை ஏற்க மறுத்ததால் இஸ்ரேலிய கடற்படையினர் அந்தப் படகில் ஏறி தடுக்க வேண்டி ஏற்பட்டதாக அந்நாட்டின் இராணுவப் பேச்சாளர் கூறினார்.

படகில் இருந்தவர்களுடன் பலவந்தமாக நடந்துகொள்ளவில்லை என்றும், கடற்படையினர் அவர்களுக்கு உணவும் குடிபானமும் கொடுத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

குறித்த படகு இப்போது இஸ்ரேலின் அஷ்டோட் துறைமுகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.

இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரிலிருந்து, பின்லாந்து நாட்டுக் கொடியுடன் அக்டோபர் 7-ம் திகதி புறப்பட்ட எஸ்த்தல் என்ற இந்தப் படகில் 8 நாடுகளைச் சேர்ந்த 20 பேர் அளவில் இருந்துள்ளனர்.

காசா நிலப்பரப்புக்குள் வசிக்கும் பாலஸ்தீனர்களுக்கு மருந்துப் பொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்களை எடுத்துக்கொண்டு இந்தப் படகு சென்றது.

ஐரோப்பிய நாடுகளின் அரசியல்வாதிகள் ஐந்து பேரும் இந்தப் படகில் சென்றவர்களில் அடங்குகின்றனர்.

காசா கரையோரப் பகுதியை 2007-ம் ஆண்டில் ஹமாஸ் இஸ்லாமியவாதிகள் கைப்பற்றிய பின்னர் அந்தப் பகுதிக்கான நுழைவாயிலில் இஸ்ரேல் தடைகளை ஏற்படுத்தியது. bbc


No comments

Powered by Blogger.