குர்பான் கடமைக்கு சிக்கல் - ஹரிஸ்பத்துவ பிரதேச சபை சண்டித்தனம்
கண்டி மாவட்டத்திலுள்ள ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஆடு மாடுகளை அறுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் இம் முறை குர்பான் கடமையை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆடு மாடுகளை அறுப்பதற்கு தடைவிதிக்கும் வகையில் ஹாரிஸ்பத்துவ பிரதேச சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு குர்பான் கடமையை நிறைவேற்ற சிக்கல் எழுந்துள்ளது.
ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 4000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. vi
Post a Comment