Header Ads



விண்வெளியில் மிதப்பது விலை மதிப்பற்ற அனுபவம் - சுனிதா வில்லியம்ஸ்


சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்றுள்ள 33-வது குழுவில் இடம் பெற்றுள்ள இவர் இந்த பயணத்தின் 100-வது நாளையொட்டி அங்கிருந்தபடியே டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது,, 

 விண்வெளியில் மிதந்த படியே வாழும் இந்த அனுபவத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். இதே மனநிலை எனக்கு எப்போதும் இருக்குமா? என்பதை என்னால் உறுதியாக கூற முடியாது. எனவே, இந்த விண்வெளி பயணத்தின் போதே எவ்வளவு பறக்க முடியுமோ, எவ்வளவு மிதக்க முடியுமோ, அதையெல்லாம் முழுமையாக அனுபவித்துவிட நான் ஆசைப்படுகிறேன். விண்வெளியை விட்டு பூமிக்கு திரும்பிய பின்னர், புவி ஈர்ப்பு தன்மையற்ற நிலையில் அந்தரத்தில் மிதந்தபடியே, நம் வாயில் வந்து விழும் பொருட்களை சுவைத்து மகிழ முடியாது.

 நம் வீட்டைப் போன்ற சுகமான, நிம்மதியான இடம் உலகத்தில் வேறெங்கும் கிடையாது. விண்வெளியில் வீட்டின் சுகத்தை எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்தில், தலையணை இல்லாமல், உடலை நீட்டி படுக்க முடியாமல், தூங்குவது சிரமமாகதான் இருந்தது. இப்போது, இதுவே பழகிப் போய் விட்டது. இந்த நேரத்தில், நாங்கள் தங்கியுள்ள இடம்தான் எங்களுக்கு வீடாக உள்ளது. நாங்கள் பயன்படுத்திய பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறிக் கிடக்கின்றது. ஆனால், எந்த பொருள் எங்கே இருக்கிறது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அடுத்த குழு இங்கு வருவதற்குள் நாங்கள் இந்த இடத்தை சுத்தம் செய்து விட வேண்டும்.

 இங்கு தங்கி ஆராய்ச்சி செய்வதையும், விண்வெளியில் மிதப்பதையும் நான் மிகவும் நேசிக்கிறேன். இந்த அனுபவம் விலை மதிப்பற்றது. இவ்வாறு அவர் கூறினார். சுனிதா வில்லியம்ஸ், ரஷ்யாவின் யூரி மலன் செக்னோ, ஜப்பானின் அகிகிகோ ஒஷிடே ஆகியோருடன் விண்வெளியில் தங்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சி நிலையத்தின் 33-வது கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.