குழந்தைக்கு கழிவறை பயிற்சி வழங்குபவரா நீங்கள்...?
மூன்று வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கழிவறையை பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை பெற்றோர்கள் வழங்கும் போது குழந்தைகள் பாதிப்புக்குள்ளாவதாக குழந்தைகளுக்கான வைத்திய நிபுணர்கள் எச்சரிப்பதாக. டெய்லி மெயில், தெரிவித்துள்ளது.
மிகவும் குறைந்த வயதில் பிள்ளைகளுக்கு கழிவறை தொடர்பான பயிற்சிகளை பெற்றோர் வழங்குவதாலேயே அதிகளவிலான கழிவறை விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்தக் காலப்பகுதியில் குழந்தைகளின் சிறுநீர்ப்பை வலிமையானதாக இல்லாதிருப்பதால் இவ்வகையான விபத்துகள் ஏற்படுவதாக கலிபோர்னியாவில் உள்ள வோக் பாரஸ்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஸ்டீவ் ஹோஜ் தெரிவிக்கின்றார்.
இந்த விபத்துக்களால் மலச்சிக்கல்கள், சிறுநீரக பாதிப்பு,சிறுநீரக குழாய்களில் தொற்று நோய் போன்றவை ஏற்படலாம்.இந்த விபத்துக்களில் பெரும்பாலும் தத்தித் தத்தி நடக்கும் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர்.
மிகவும் சிறுவயதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கழிவறை பழக்கத்தை வழங்குகின்றனர். இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகின்றது.
7 வயதுக்கு குறைவான 8 வீதமான பெண் பிள்ளைகள் சிறுநீரகக் குழாய் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
வருடாந்தம் ஒரு மில்லியன் பேர் சிறுநீரகம் தொடர்பான சிகிச்சை நிலையங்களுக்குச் செல்வதுடன் 14 வீதமானவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதி பெறுகின்றனர்.
உலகளாவிய ரீதியில் 5 மில்லியன் சிறுவர்கள் தமது கட்டில்களில் சிறுநீர் கழிக்கின்றனர். அதில் 20வீதமானோர் 5 வயதுச் சிறுவர்களாவர். 12 வீதமானோர் 6வயதுச் சிறுவர்களாவர்.10 வீதமானோர் 7வயதுச் சிறுவர்களாவர் எனவும் டாக்டர் குறிப்பிட்டுள்ளதாக "டெய்லி மெயில்' தெரிவித்துள்ளது.
Post a Comment