Header Ads



இலங்கை முஸ்லிம் மாணவி இங்கிலாந்தில் சாதனை


மட்டக்களப்பு - ஏறாவூரில் பிறந்து தற்போது இங்கிலாந்தில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வரும், முன்னாள் அரச சேவை உத்தியோகத்தர் எஸ்.எச். அப்துல் ரசாக் அவர்களின் புதல்வி " வசீமா ரசாக்" , Interconnecting Cisco Networking Devices (ICND) எனும் பரீட்சையில் தோற்றி தன்னுடைய 15 ஆவது வயதில் "Network Engineer " ஆக சித்தியெய்தி பிரித்தானியாவில் சாதனை படைத்துள்ளார். 

இரட்டைத் தரமுயர்வொன்றின் மூலம் க.பொ.த. உயர்தர வகுப்பில் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ICND எனும் கற்கை நெறியை பிரத்தியேகமாக மேற்கொண்டே அவர் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார். 

ஏறாவூர் மட்/ அஹமத் பரீத் வித்தியாலயத்தில் தனது பாலர் படிப்பைத் தொடர்ந்த இம்மாணவி 5 வது வயதில் தனது பெற்றோருடன் இங்கிலாந்தில் குடியேறி தற்போது அங்கேயே வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

தகவல் - மொஹமட் மபாஸ்

1 comment:

  1. nallaha padikkirawanga ellam foreign ponal naadu eppadi urppadum????how ever best of luck that girl and insha allah you want take more and more awards in future (how ever please after reach your goal take care about your parents )Shaheer Malaysia

    ReplyDelete

Powered by Blogger.