Header Ads



பௌத்த அமைப்புக்கள் சதி..! - இலங்கை முஸ்லிம்களோ தூக்கத்தில்..!!

இலங்கையில் மற்றுமொரு கலவரத்தை ஏற்படுத்த பௌத்த பொது பலசேனா என்ற அமைப்பு முயற்சித்துவரும் நிலையில், முஸ்லிம் சமூகம் அதுபற்றி சநிதிக்காது தூங்கிக் கொண்டிருப்பதாக மௌலவி தஹ்லான் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியுள்ள அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

பௌத்த பலசேனா என்ற அமைப்பு முஸ்லிம்களுடன் இணக்கப்பாட்டோடு வாழும் சிங்கள மக்களின் மத்தியில் விஷமக் கருத்துக்களை பரப்பி, முஸ்லிம்கள் மீதான தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்த முயலுகிறது. 1983 இனக்கலவரத்தை போன்ற ஒன்றை முஸ்லிம்களுக்கு எதிராககட்டவிழத்துவிட எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எனினும் முஸ்லிம்கள் இதுவரையில் இவ்விடயம் பற்றி சற்றேனும் சிந்திக்கவில்லை. இயக்கங்கள் என்ற ரீதியில் பிரிந்து அதன்பாலே எமது கவனம் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு பிரிந்து செயற்படுவதால் எமக்கெதிரான சக்திகளை தகர்ப்பதற்கான பலத்தை இழந்துள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. உண்மையை உணரத்துணிந்த உலமா சகோதரர் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்,சிங்களபல உரிமய எனும் அமைப்பை இது வரையிலும் அறியாமல் இருந்தமை உங்கள் அறியாமை முஸ்லிம்களில் ௬௫ வீதமானவர்கள் அறிவர் இருப்பினும் ஆத்மீகம் மூலம் எதையும் சாதிக்க நினைக்கும் ஒரு கூட்டம் ,ஆட்சி அதிகாரம் வந்துவிட்டால் எல்லாம் சரியகிப்போகும் எனும் ஒரு இயக்கம்,அறிவை வளர்த்துவிட்டால் அதன் மூலம் இனி வரக்கூடிய எம் சமூகம் சரிக்கட்டி விடும் என்கிற ஒரு அமைப்பு,குர்ஆன் ஹதீஸ் பின்பற்றப்படும் போது அல்லாஹ் வின் உதவியை கொண்டு தடுத்து விட முடியும் என்ற ஒரு அமைப்பு இப்படி இயக்கவலர்சியில் பாடு படும் என் சகோதரர்களே எல்லோரும் ஓன்று பட்டோமானால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறியாத சமூகமாக இருக்காமல் அவசரமாகவும்,அவசியமாகவும் ஒன்று படுவோம், ஓன்று படுவதக்கு ஒரே வழி குர்ஆன் ஹதீஸ் மட்டும் தான்

    ReplyDelete

Powered by Blogger.