சகல மருந்துகளின் விபரங்களையும் மும்மொழிகளிலும் வெளியிட நடவடிக்கை (படங்கள்)
(ஏ.எல்.றபாய்தீன்பாபு)
இலங்கையில் விற்கப்படும் அனைத்து மருந்து வகைகளின் விபரமும் இனிமேல் மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் இல்லையாயின் அது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகும்.
மேற் கண்டவாறு தெரிவித்தார் இலங்கை மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் நட்டத்தரனி எஸ்.ஜி.புஞ்சிஹேவா. கந்தளாய் சர்வோதய மண்டபத்தில் மாற்றுக் கொள்கைக்கான நிலையம் நடாத்திய மொழிச்சங்க உறுப்பினர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான கருத்தரங்கிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சகல மருந்துப் பொருட்கள் உறைகளிலும் ஆங்கிலம் மட்டும் காணப்படுகிறது.சில வற்றில்ஆங்கிலமும், சிங்களமும் காணப்படுகிறது. இது ஆபத்தான விடயமென்பதால் எமது மாற்றுக் கொள்கைக்கான நிலையம் இது பற்றி நுகர்வோர் பாதுகாப்புச்சபையிடமும்,மனித உரிமை மீறல் சபையிடமும் முறையிட்டதன் பேரில் அவர்கள் ஆங்கிலம்,சிங்களம்,தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடுவதற்கான நடவடிக்கையை உடன் எடுப்பதாகக் கூறியுள்ளனர்.
இது போலவே இலங்கையின் ருபா நோட்டுளில் சில விபரங்கள் சிங்களத்தில் மட்டுமே அச்சாக்கப்பட்டுள்ளது. இது பாரிய அடிப்படை உரிமை மீறல் என்பதனால் வழக்குத் தொடர்ந்துள்ளோம் சகல நேட்டுக்களிலுமுள்ள விபரங்கள் மும்மொழிகளிலும் தெரிவிக்கப்பட வேண்டுமென்று கூடிய விரைவில் அதற்குரிய நல்ல தீர்ப்பும் கிடைக்கப் பெறுமென்று அவர் தெரிவித்தார்.
Post a Comment