நீர்கொழும்பு, போருதோட்டயில் மின்சாரம் தாக்கி முஸ்லிம் தாய் வபாத் - பிள்ளைகள் காயம்
நீர்கொழும்பு போருதொட்ட பிரதேசத்தை சேர்ந்த சீனத்துல் ஜிப்ரியா என்ற 42 வயதுடைய பெண் மின்சாரம் தாக்கி மரணமானர். அவரது பிள்ளைகளான முஹம்மத் மின்னார் (13வயது) மகளான பாத்திமா முனீரா ஆகியோரே காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் வீட்டின் மேல் மாடிக்கு சென்று தொலைக்காட்சி அண்டனாவை வைக்க முயன்றுள்ளார். இதன்போது அண்டனா கம்பி சரிந்து வீட்டின் முன்பாக செல்லும் மின்சார வயர்களின் மேல் விழுந்துள்ளது. இதனை அடுத்து மின்சாரம் தாக்கி சிறுவன் வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார். இதன்போது சிறுவனின் சகோதரியும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் சிறுவனின் தாயார் மகனை காப்பாற்ற ஓடி வந்து தொலைக்காட்சி அண்டனா கம்பியை தொட்டபோது அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில் மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே தாயார் வைத்தியசாலையில் மரணமாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஅல்லாஹ் அந்தத் தாயாரின் பாவங்களை மன்னித்து அவருடைய கபுருடைய, மறுமை வாழ்க்கையை இலகுவானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் ஆக்கிவைக்க பிராத்திப்போம்.
அதே போன்று, காயமடைந்துள்ள இரண்டு பிள்ளைகளும் எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் முழுமையாக குணமடைய துஆ கேட்போம்.
குழந்தைகளின் தந்தைக்கு அல்லாஹ் மன உறுதியையும், பொருளாதார வலிமையையும் கொடுப்பானாக.
ஒருவர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களில், மற்றவர்கள் கைக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்கள் அறிவுறுத்தப் படல் வேண்டும். பிழையான அணுகுமுறைகள், அதிக ஆபத்தையே ஏற்படுத்தும்.
அவ்வளவுதான் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருந்தாலும், அவை இக்காட்டான நேரத்தில் செயலுக்கு வருவதில்லை.
அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி எதுவும் நடப்பதில்லை.
இங்கே, ஒரு தாய்...... அதுதான் தாய்ப்பாசம்.....
அல்லாஹ் தாயை விடவும் எழுபது மடங்கு பாசமுள்ளவன்.
நாட்டில் இடியுடன் கூடிய காலநிலை பல பகுதிகளில் நிலவுகின்றது, பொதுமக்கள் இடி மின்னல் காணப்படும் நேரங்களில் கைக்கொள்ள வேண்டிய அறிவுரைகளைப் பின்பற்றி முன் எச்சரிக்கையுடன் செயல்படுவதே சிறந்தது.