அகில இலங்கை பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் சங்க வருடாந்த மகாநாடு
(அஸ்ஸிஹாபி)
அகில இலங்கை பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த மகா நாடு இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.
திருகோணமலை கலாசார மண்டபத்தில் டபிள்யூ. எம்.ரத்னபால தலைமையில் இடம்பெற்ற இம்மகாநாட்டில் செயலாளர் பிரமதாச கஜநாயக்க,பொருளாளர் எம்.ஐ.எம்.ஸலாஹூத்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது உத்தியோகத்தர்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றைத் தீர்த்துக் கொள்வது சம்பந்தமான வழிவகைகள் பற்றித் தீர்மானிக்கப்பட்டதாகவும் சங்கத்தின் பிரதித் தலைவர் ஏ.அருள்தாஸ் தெரிவித்தார்.
Post a Comment