ஹஜ்ஜுப் பெருநாளுக்காக சிரியாவில் சண்டை நிறுத்தம்
ஹஜ்ஜுப் பெருநாளுக்காக சிரியாவில் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள, அதிபர், பஷர் அல் ஆசாத் ஒப்புக்கொண்டு உள்ளார். சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த, 18 மாதங்களாக போராடி வருகின்றனர். ஆசாத் பதவி விலக மறுப்பதால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா, ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால், சிரியாவில், கடும் சண்டை நடக்கிறது. இருதரப்பிலும் சமரசம் ஏற்படுத்துவதற்காக, அரபு நாடுகள் மற்றும் ஐ.நா.,வின் சார்பில், லக்தர் பிராமி நியமிக்கப்பட்டு உள்ளார்.
கெய்ரோ நகரில், இதுகுறித்து பிராமி குறிப்பிடுகையில், "பக்ரீத்தையொட்டி, சண்டை நிறுத்தம் மேற்கொள்வது குறித்து, இருதரப்பிலும் பேசினேன். போர் நிறுத்தத்துக்கு, இருதரப்பிலும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். எனினும் இது தொடர்பான அதிகார அறிவிப்பை சிரியா அரசு, 25ம் தேதி வெளியிடுகிறது' என்றார்.
Post a Comment