குவைத்தில் டிசம்பர் முதலாம் திகதி பாராளுமன்ற தேர்தல்
குவைத்தில், வரும் டிச., 1ம் தேதி, பார்லிமென்ட் தேர்தல், அறிவிக்கப்பட்டு உள்ளது.குவைத்தில், 2009ல் நடந்த, பார்லிமென்ட் தேர்தலில், 50 இடங்களுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் மீது , ஏராளமான ஊழல் புகார்களை கூறி வந்தனர். இது தொடர்பாக, பிரதமர், நசீர் முகமது, பதவி விலகினார். இருப்பினும், ஊழல் செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொடர் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, பல மாதங்களாக, பார்லிமென்ட் செயல்படவில்லை.பார்லிமென்டுக்கு தேர்தல் நடத்தக் கோரி, தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான தீர்ப்பை, கோர்ட் அளித்துள்ளது.இதையடுத்து, 7ம் தேதி பார்லிமென்ட் கலைக்கப்பட்டது; வரும், டிச., 1ம் தேதி, தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.அரபு நாடுகளிலேயே, குவைத் பார்லிமென்ட் தான், அதிகாரம் பெற்ற பார்லிமென்டாக உள்ளது. குவைத் அரச குடும்பத்தினர், அமெரிக்க ஆதரவு கொள்கையை கடைபிடிக்கின்றனர். ஆனால், இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் செய்து வருகின்றனர்.
ஈராக்கிலிருந்து வாபஸ் பெற்ற அமெரிக்க ராணுவம், ஈரானை ஒடுக்க, குவைத்தை, தன் படைத்தளமாகப் பயன்படுத்தி வருகிறது. துபாய், தோகா போன்றவை, பொருளாதாரத்தில் முன்னேறியவையாக உள்ளன. ஆனால், குவைத் இன்னும் முன்னேற்றமடையாமல் உள்ளதாக, எதிர்க்கட்சியினர், கண்டித்து உள்ளனர்.
Post a Comment