Header Ads



புகை பிடிப்பது பேரக் குழந்தைகளுக்கும் ஆபத்தானது - புதிய ஆய்வில் தகவல்


ஆஸ்துமா என்பது உடல் நலக்குறைவை ஏற்படுத்தும் சுவாச நோயாகும். இது குழந்தை பருவத்தில் இருந்தே உருவாகி பல வருடங்கள் கழித்து வெளிப்படும். இதற்கு முக்கிய காரணம் 'நிக்கோடின்' பாதிப்பு என கண்டறியப்பட்டுள்ளது. பெண்களின் கர்ப்ப காலத்தின்போது அவர்களின் கருவில் வளரும் குழந்தை நுரையீரலை சிகரெட்டில் பயன்படுத்தும் 'நிகோடின்' பாதிப்பை ஆஸ்துமாவை உருவாக்குகிறது.

மேலும் அது சிகரெட் பிடிப்பவர்களின் 3-வது தலைமுறையையும் பாதிக்கிறது. இதன் மூலம் அவர்களின் பேரக்குழந்தைகளும் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த தகவல் கலிபோர்னியாவில் உள்ள ஹார்பர்-யூசி.எல்.ஏ. மெடிக்கல் சென்டர் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. அவர்கள் கர்ப்பமாக இருந்த எலிகளிடம் ஆய்வு நடத்தி இதை கண்டறிந்துள்ளனர்.

சிகரெட் பிடிக்கும் அல்லது சிகரெட் புகையினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்பட்டு செயல்பாடு குறைகிறது. இதன் மூலம் ஆஸ்துமா உருவாகிறது. நிகோடினின் வீரியம் முதல் தலைமுறை குழந்தைகளை தாக்காவிட்டாலும், ரத்தத்தில் தேங்கியிருந்து அது அவர்களின் குழந்தையை பாதிக்கும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. எனவே சிகரெட் பிடிப்பது அவர்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவித்தாலும், பேரக் குழந்தைகளின் நலனையும் அது பாதிக்கிறது. 

No comments

Powered by Blogger.