அம்பாறையில் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் (படங்கள்)
(ரீ.கே. றஹ்மத்துல்லா)
அம்பாறை கரையோரப் பிரதேசசெயலகப் பிரிவுகளின் சமூர்த்தி பயனாளிகளினால் 'திவிநெகும' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று ஞாயிற்றுக் கிழமை காலை (21) தம்பிலுவில் மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பமானது.
திவிநெகும திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு விவசாயம், வீட்டுத்தோட்டம், கைத்தொழில் மற்றும் மீன்பிடி, மிருக வளர்ப்பு போன்ற திட்டங்களுக்கு சமூர்த்தி அதிகாரசபை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
குறைந்த வருமானம் பெற்று வரும் குடும்பங்களின் வருமானத்தை அதிகரிப்பதுடன், அவர்களின் சுயதேவையைப் பூர்த்தி செய்து சுத்தமான உணவுகள் மற்றும் காய்கறிகளை நுகரச் செய்வதன் மூலம் சுகாதாரம், போஷனை மட்டத்தையும் உயர்த்துவதும் இதன் பிரதான நோக்கங்களாகும்.
இதனடிப்படையில் சமூர்த்தி பயாளிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், மேலும் மக்களை விழிப்டையச் செய்து உள்ளுர்
உற்பத்திகளை அதிகரிக்கச் செய்வதும் இக்கண்காட்சியின் நோக்கமாகும்.
மாவட்ட சமூர்த்தி உதவி ஆணையாளரின் அனுரத்த தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டார். மற்றும் அதிதிகளாக சமூர்த்தி வாழ்வாதாரத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் எம். நடேசராஜா, உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரின் இணைப்பச் செயலாளர் ஏ.பி. தாவூத், பிரதேசசெயலாளர்கள்ஈ சமூர்த்தி முகாமையாளர்கள், சமூர்த்தி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment