ஹஜ் பெருநாள் விடுமுறை தினத்திற்கு எதிர்ப்பு
(TM)
இவ்வருடத்திற்கான ஹஜ் பண்டிகை எதிர்வரும் 27ஆம் திகதி என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்ததன் பின்னர், 26ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்ட பொது விடுமுறைதினமானது 27ஆம் திகதிக்கு அரசினால் மாற்றப்பட்டது. இந்நிலையில் 26ஆம் திகதி விடுமுறை தினத்திற்காக பதிவுகளை மேற்கொண்ட ஹோட்டல் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்.,
26ஆம் திகதி விடுமுறை என்பதால் எமது வாடிக்கையாளர்கள் பலர் முன்பதிவுகளை அன்றைய தினம் எமது ஹோட்டல்களில் மேற்கொண்டிருந்தனர். ஆனால், விடுமுறை தினத்தை மாற்றியதால் எமது வாடிக்கையாளர்கள் தமது முன்பதிவுகளை ரத்து செய்கின்றார்கள். இல்லையேல் மறுதினத்திற்கு பதிவினை கேட்கிறார்கள். மறுதினம் அதாவது 27ஆம் திகதி ஏற்கனவே வேறு வாடிக்கையாளர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளதால் அதுவும் சிக்கலாக இருக்கிறது. இந்நிலையில் எமது வாடிக்கையாளர்களில் பலர் தமது 26ஆம் திகதி பதிவுகளை ரத்து செய்துள்ளனர். இவ்விடயத்தினால் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இலங்கை முஸ்லிம்களின் அதிகாரமளிக்கப் பட்ட மார்க்க சபையான ஜமியத்துல் உலமா தனித்துத் தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய விவகாரங்களில், மார்க்க அடிப்படையில் நிராகரிக்கப் பட வேண்டிய பல்வேறு பட்ட பிழையான கொள்கைகள், அடிப்படைகளைக் கொண்ட தக்கியாக்கள், ஸாவியாக்களின் தலைவர்களை ஏன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.
ReplyDeleteமக்களிடம் மார்க்க அறிவு குறைவாக இருந்த ஒரு காலத்தில் தக்கியாக்கள், தரீகாக்கள், ஸாவியாக்கள் என்பன பெரும் செல்வாக்குடன் விளங்கியிருந்த பொழுதும், குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான மார்க்க அறிவு மக்களுக்கு கிடைத்து, மக்கள் தெளிவு பெற்றக் கொண்டிருக்கும்
இன்றைய கால கட்டத்தில், பிழையான அடிப்படைகளைக் கொண்ட தக்கியா, தரீக்கா, ஸாவியா என்பன செல்வாக்கை இழந்து விட்டிருக்கும் நிலையிலும் கூட, அவற்றின் தலைவர்கள், இலங்கையின் அனைத்து முஸ்லிம்களையும் சார்ந்து ஜமியத்துல் உலமா சபையினால்
மேற்கொள்ளப் படுகின்ற பிறை தொடர்பான தீர்மானங்களில் தாக்கம் செலுத்த தொடர்ந்தும் அனுமதிக்கப் பட்டுள்ளமையானது துரதிஸ்டமே.
பிறை தொடர்பான தீர்மானங்களை, இது விடயத்தில் மார்க்கம் தடை செய்துள்ள வான சாஸ்திரத்திற்குள் மூழ்க விட்டுவிடாமலும், மார்க்க அடிப்படைகளுடன் முரண்படும் தக்கியா, சாவியா தலைவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தாமலும், மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு அகில இலங்கை ஜமியத்துல் உலமாவுக்கு உள்ளது.
இஸ்லாம், யவ்முல் நஹ்ர் என அறுத்துப் பலியிடுவதற்காக ஹஜ்ஜுப் பெருநாளுடன் மூன்று தினங்களை பிரகடனம் செய்துள்ளது. ஹஜ்ஜுப் பெருநாள் என்பது துல் ஹிஜ்ஜா மாதத்தின் பிறை பத்து ஆகும். 14 அல்லது 15 ஆம் பிறை பூரணை சந்திரனாக, பெளர்ணமி போயா தினமாக அமையும்.
ReplyDeleteஎனினும், இம்முறை, உலக முஸ்லிம்கள் 26 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட உள்ள நிலையில், இலங்கை
முஸ்லிம்களை சனிக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் படி ஜமியத்துல் உலமா பணித்துள்ளது. எனினும், திங்கட் கிழமை இலங்கையில் போயா விடுமுறை தினமாக அமைந்துள்ளதால்,
ஜமியத்துல் உலமாவின் தீர்மானம் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் அறுத்துப் பலியிடுவதனை சனி, மற்றும் ஞாயிறுடன் மட்டும் மட்டுப் படுத்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.
பிறை என்பது, இரண்டு பெருநாள்களுக்கு மட்டுமுள்ள ஒரு விடயமாக அல்லாமல், முழு முஸ்லிம்களுக்காகவும் இஸ்லாம் காட்டித் தந்த நாட்காட்டியாக (கலண்டர்) உள்ளது. ஆகவே, பிறையைத் தீர்மானிக்கின்ற விடயத்தில் சர்ச்சைகளை, பிரிவினைகளை நீடிக்க
விடாமல், ஆக்கபூர்வமான, முன்னேற்றகரமான விதத்தில் அகில இலங்கை இலங்கை ஜமியத்துல் உலமா, மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.