Header Ads



இது மகா பாவம்..!


பாகிஸ்தானில், குர்பானி ஆடு விற்ற, இந்து ஒருவர் கொல்லப்பட்டு, அவரிடமிருந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்தை சேர்ந்தவர் தயன் சந்த். கடந்த வாரம், பக்ரீத்தையொட்டி, லத்திபாபாத் சந்தையில் குர்பானி ஆடு மற்றும் மாடுகளை விற்றார். கால்நடைகளை விற்றதில் 7.20 லட்சம் ரூபாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் இவரை மடக்கி கொலை செய்தவர்கள், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக, தயன்சந்தின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். இதுவரை, கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து, தயன்சந்த் உறவினர்கள், ஐதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர் சங்கம் அருகே, மறியல் போராட்டம் நடத்தினர்.இந்த கொலை தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.