மாத்தளையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்த பௌத்த இனவாதிகள் அழைப்பு
(முஹம்மது ஹஸான்)
அண்மைக் காலமாக சில பௌத்த இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பல ஆர்பாட்டங்களை நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக "றாவய பௌத்த" அமைப்பினால் மாத்தளை நகரில் நாளைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் பாரியதொரு ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜும்மா தொழுகை முடியும் தருவாயில் இவ் ஆர்பாட்டம் மஸ்ஜிதுக்கு மிகவும் அருகாமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை முஸ்லிம்கள் மத்தியில் பல அச்சங்களையும் கேள்வி குறிகளையும் தோற்றுவித்துள்ளது. இதன் மூலம் இவர்களது இழிவான நோக்கம் நன்கு புலப்படுகின்றது. முஸ்லிம்களை தூண்டிவிடுவதனூடாக நாட்டில் மீண்டுமொரு இனக்கலவரத்தை தோற்றுவிப்பதே இவ் ஆர்பாட்டத்தின் பிரதான எண்ணமாகும்.
முஸ்லிம்களே மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுங்கள், இன்று அவர்கள் இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக ஒரு திட்டமிட்ட சதியுடன் செயற்பட்டுக் கொண்டிருகின்றனர். முஸ்லிம்கள் பௌத்த உடமைகளை அழிப்பதாவும் அவர்களது உரிமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகும் கூறி பல விஷமத்தனமான கருத்துக்களை பெரும்பான்மையின மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
1983 போன்றதொரு கலவரத்தை மீண்டும் எற்படுத்துவதனூடாக முஸ்லிம்களது சொத்துக்கள் சூரையாடப்பட்டு பொருளாதரா ரீதியாக முஸ்லிம்களை ஒடுக்குவதே இவர்களது பிரதான நோக்கமாகும். இஸ்லாத்தின் அதிவேக வளர்ச்சியும், இலங்கை சனத்தொகையில் அண்மையில் எற்பட்ட முஸ்லிம்களின் அதிகரிப்புமே இவர்களது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாகும்.
இது போன்ற ஒரு சில இனவாத அமைப்புகளின் சதித்திட்டங்களுக்கு ஆலாகது, மிகவும் புத்திசாலிதனமாகவும், பொருமையாகவும் நடந்து கொள்வது எமது கடமையாகும்.
Post a Comment