கொழும்பில் புதிய வீடமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு கிருலப்பணையில் மகிந்தபுரவில் ஜனசெவன 560 வீடுகள் கொண்ட தொடர்மாடி வீடமைப்புத்திட்டமொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சர் விமல் வீரவன்ச சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. என அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சில் இன்று(19) நடைபெற்ற கூட்டத்தின்போது தெரிவித்தார். இத் திட்டத்திற்காக அரசாங்கம் முதல்கட்டமாக 6699 மில்லியன் ருபாவை ஒதுக்கியுள்ளது.
இந்த வீடமைப்புத் திட்டம் ஐனாதிபதியின் மகிந்த சிந்தனையின் கீழ் ஜனசெவன 10 இலட்சம் வீடுகள் அமைக்குத் திட்டத்தின் கீழ் கொழும்பு வாழ் மத்தியதர வகுப்பினர்களுக்கு தொடர்மாடி வீடமைப்புத் திட்டமொன்றை கிருலப்பனையில் நிர்மாணிப்பதற்கு அமைச்சர் விமல் வீரவன்ச யோசனை வழங்கியிருந்தார். இத் திட்டத்திற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இத் தொடர்மாடி வீடுகள் 24 மாடிகளைக் கொண்டது. மொத்தமாக 560 வீடுகள் நிர்மாணிக்கப்படும். இத் தொடர்மாடி வீடுகள் 560 சதுர அடி, 650 சதுர அடி 850 சதுர அடிகளைக் கொண்ட வீடுகளாகும். இவ் வீடமைப்பத்திட்டத்தில் விளையாட்டு மைதாணம். சமுக நிலையம் போக்குவரத்து பஸ் நியைம், சிறுவர் பூங்கா. சந்தை போன்ற நிர்மாணப்பணிகளும் மேற்கொள்ளப்படும். இந் நிர்மாணப்பணிகளை வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள இலங்கை பொறியற் கூட்டுத்தாபணம் 3 வருட காலத்திற்குள் நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளும். எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ் வீடுகளைப் பெற விரும்புவர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக கடன் பெற்றுக் கொள்ள வசதி செய்து கொடுக்கப்படும். இவ் வீடுகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக விண்ணப்பம் கோரப்பட்டு வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும். என மேலதிக தகவல்களையும் வீடமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment