கொழும்பில் வடக்கு முஸ்லிம் அவலம் குறித்து முக்கிய மாநாடு - இராஜதந்திரிகளுக்கு அழைப்பு
வடக்கு முஸ்லிம்களின் நிகழ்கால அவலங்கள் குறித்து கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு விளக்குவதற்காக முக்கியத்துவமிக்க மாநாடு ஒன்றுக்கான ஏற்பாடுகளை சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் மேற்கொண்டிருப்பதாக அதன் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொருளாதார அவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கலந்துகொள்ளவிருப்பதுடன், முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள், சர்வதேச முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குறிப்பாக முஸ்லிம் நாடுகளுக்கும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய அவலத்தை அறியப்படுத்துவதே இந்த மாநாட்டின் பிரதான நோக்கமெனவும் என்.எம். அமீன் மேலும் குறிப்பிட்டார்.
அமீன் அவர்களே ! மாநாடு நடைபெறும் தினம் இடம் நேரம் என்பவற்றை குறிப்பிட்டு ஒரு பொது அழைப்பிதழை யாழ்பாணம் மன்னார் முல்லைடிவே கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களுக்கு அனுப்பவும். அவர்கள் கலந்து கொள்ளாத மாநாடு மாப்பிள்ளையும் பெண்ணும் இல்லாத திருமண வீடு போன்றதாகும்.
ReplyDeleteஉங்களது இந்த முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.