Header Ads



கடாபியின் பேச்சாளர் பிடிபட்டார்


லிபியத் தலைவர் கடாபியின் உத்தியோகபூர்வ பேச்சாளராக செயற்பட்ட மொஸா இப்றாஹீம் கைது செய்யப்பட்டுள்ளதாக லிபியாவின் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

லிபியாவில் போராட்டம் வெடித்தவுடன் கடாபியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் குறித்தும் உலகம் அறிந்துகொண்டது. லிபியாவில் முகாமிட்டிருந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்த இவர் கடாபியுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தார்.

லிபியத் தலைநகர் திரிப்போலியின் தென்மேற்குப் பகுதியிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆங்கிலத்தில் சிறந்த அறிவை இவர் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.