ஹெம்மாதகமையில் மனாருள் ஹுதா வாசிகசாலை, கல்வி நிலைய திறப்பு விழா
(பஷீர் அலி)
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஹெம்மாதகமைக் கிளை 'மனாருள் ஹுதா' வாசிகசாலை மற்றும் கல்வி நிலையத்தை கொடேகொட கிராமத்தில் திறந்து வைத்தது.
30 இலட்ச்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட நான்கு மாடிகளைக் கொண்ட இவ்வாசிகசாலைக் கட்டிடத் தொகுதியை பேராதனைப் பல்கலைக்கழக அரபு, இஸ்லாமிய நாகரீகத்துறை முன்னாள் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஹெம்மாதகமை மஸ்ஜித்களின் சம்மேளனக் கல்விப் பகுதிப் பாறுப்பாளரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மத்திய மஜ்லிஷ் ஷூரா உறுப்பினருமாகிய அல்ஹாஜ் எம்.ஐ.எம் அமீன் ஆசிரியர் அவர்கள் திறந்துவைத்தார்;.
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக ஹெம்மாதகம மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ.ஸீ.எம். அஸ்ஹர் அதிபர், கொடேகொட அல்ஹுதா ஜும்ஆப் பள்ளிப் பரிபாளன சபைத் தலைவர் அல்ஹாஜ் ஏ.டப்ளியு.எம். ஸரூக் ஆகியோருடன் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
Post a Comment