Header Ads



பள்ளிவாசலுக்கு தீவைப்பு - சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்த கோரிக்கை


பள்ளிவாசல்களை இடிப்பதற்கோ சேதப்படுத்துவதற்கோ இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி உறுதியளித்திருந்த நிலையில் அநுராதபுரம், மல்வத்துஓயா பள்ளிவாசல் ஹஜ் பெருநாள் தினத்தன்று தீயிட்டு எரிக்கப்பட்டது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கின்றது. அரசாங்கம் இது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி. ஹஸனலி  தெரிவித்தார். 

கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் இருக்கும் வரை ஒரு பள்ளிவாசலையாவது இடிக்கவோ அல்லது அதன் மீது தாக்குதல் நடத்தவோ இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார். ஆனால் முஸ்லிம்களின் புனித நாளான ஹஜ் தினத்தில் அநுராதபுரம் மல்வத்து ஓயா என்ற இடத்திலுள்ள பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது வேதனையளிப்பதாகவுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதவாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். (Vi)

No comments

Powered by Blogger.