வைத்தியர்களின் கவனயீனம் - வாழைச்சேனை முஸ்லிம் யுவதி பிரசவத்தின் போது வபாத்
(அனா)
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் கவலையீனம் காரணமாக பிள்ளைப் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் யுவதி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
வாழைச்சேனை மாவடிச்சேனை பஷீர் வீதியைச் சேர்ந்த மீராமுஹைதீன் மாகிரா (வயது 29) என்றழைக்கப்படும் ஒருவரே இவ்வாறு உயிரி இழந்தவராவார்.
பிள்ளைப் பிரசவத்திற்காக நேற்று முந்தினம் (27.10.2012) காலை 08.30 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இவ் யுவதி அனுமதிக்கப்பட்டிருந்தார். பிற்பகல் 12.45 மணியளவில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து குறித்த யுவதியில் இருந்து தொடர்ச்சியாக இரத்தம் வழிந்தோடியுள்ளது. சுமார் மூன்று மணி நேரமாக இரத்தம் வழிந்தோடிய போதிலும் வைத்தியர் மற்றும் மருத்துவ மாதுக்களின் கவலையீனம் காரணமாக இவரின் நிலை கவலைக்கிடமான நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டதையடுத்து மாலை நான்கு மணிக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று முந்தினம்; (27.10.2012) உயிர் இழந்துள்ளார்.
இவ் யுவதியின் உயிரிழப்புச் சம்பவம் தொடர்பில் பிரதேச வாசிகள் கவலை தெரிவிப்பதோடு வாழைச்சேனை வைத்தியசாலையில் குறித்த சம்ப நேரத்தில் கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் மருத்துவ மாதுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் குற்றம் சுமத்துகின்றனர்.
மரணமடைந்த யுவதியின் ஜனாஸா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து நேற்று (28.10.2012) மாலை உறவினர்களிடம் ஓப்படைக்;கப்பட்டு பின்னர் ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்மாப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Post a Comment