Header Ads



கட்டாரில் மரணித்தவரின் ஜனாஸாவை இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடு


(அனா)

கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்ற சம்மாந்துரையைச் சேர்ந்த முஹம்மட் இஸ்மாயில் (நளீம்) நேற்று (28.10.2012) கட்டார் நேரப்படி பிற்பகல் 05.30 தனது வேலைத் தளத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்து உயிர் இழந்துள்ளார்.  

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரது ஜனாஸா பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் தற்போது கட்டார் அஹமட் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது ஜனாஸாவை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக கட்டாரில் இருந்து எம்.ஐ.எம்.டில்சாத் தெரிவித்தார்.




1 comment:

  1. தகவலுக்கு நன்றி... அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவர்கத்தை வழங்குவானாக ... (சிறு திருத்தம்) அந்த வைத்தியசாலை பெயர் ஹமத் மருத்துவ நிறுவனம் Hamad Medical Corporation என்பதாகும்.

    ReplyDelete

Powered by Blogger.