Header Ads



கல்முனை மாநகரத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் (படங்கள்)


(சௌஜீர் ஏ முகைடீன்)

ஐக்கிய நாடுகள் சபையின் 67வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகரத்தினை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் இன்று (24.10.2012) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

கல்முனை நகரத்திலுள்ள குப்பை கூளங்களை அகற்றி சுத்திகரித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக யுனப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கல்முனையினை அழகு மிக்க நகராமாக பேணும் பொருட்டு கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் 4 கழிவு சேகரிக்கும் தொட்டிகளும் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் 2 கழிவு சேகரிக்கும் தொட்டிகளும் நிறுவப்பட்டது.    

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர்அலி, யுனப்ஸ் நிறுவனத்தின் ஆழுமை விருத்திக்கான தொழிற்பாட்டு முகாமையாளர் அனா செக்கமென்டோ, யுனப்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள், மாநகர சபை ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 







No comments

Powered by Blogger.