திருகோணமலையில் காற்றுடன் கூடிய மழை (படங்கள் இணைப்பு)
(ஏ.எல்.றபாய்தீன்பாபு)
திருகோணமலை மாவட்டத்தில் பிற்பகல் முதல் கனத்த மழையுடன் கூடிய காற்று வீசிவருகிறது இதனால் மக்கள் சொல்லொனாத் துயரங்களை எதிர் நோக்கியுள்ளனர்.கடல் கொந்தளிப்பு காரணமாக கரையோரப் பிரதேசங்களில் வாழும் ஆயிரக்களக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நாடிச் செல்லுகின்றனர்.திருமலை பட்டணமும் சூழல் பிரதேச செயலாளர் பிரிவு,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள துளசிபுரம்,லவ்லேன் பள்ளத்தோட்டம்,வாழையூற்று பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கிண்ணியா,மூதூர் பிரதேசங்களும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிலாவெளி மொறவௌ வீதியில் மின் கம்பங்கள் சரிந்துள்ளதோடு, மரங்களும் முறிந்துள்ளது. வீதிகளில் விளம்பர காட்சிப்பலகைகள் காற்றினால் வீசி எறியப்பட்டுள்ளன.குச்சவெளி பல்லவக்குளம்,பெரியவில்லுக் குளங்கள் நீர் நிரம்பியுள்ளன. செவ்வாய்க்கிழமை பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகக் குறைவாக இருந்தது.
Post a Comment