Header Ads



வருடத்திற்கு எத்தனை தடவை நீங்கள் கோபப்படுகிறீர்கள்..?



சராசரியாக ஒவ்வொருவரும், ஓராண்டில், 336 முறை, கோபப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லண்டனில், 2,000க்கும் அதிகமானவர்களிடம், கோபம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

10ல் ஆறு பேர், காரணமில்லாமல் கோப்படுவதாகவும், நான்கில் ஒருவர், கோபப்படும் போது, கட்டுப்பாட்டை இழந்து விடுவதாகவும் தெரிவித்து உள்ளனர். பிரிட்டனை பொறுத்தவரை, ஒருமாதத்துக்கு ஒவ்வொருவரும், 28 முறை கோபப்படுவதாகவும், சராசரியாக ஆண்டுக்கு, 336 முறை கோபப்படுவதாக தெரியவந்து உள்ளது. 

அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.உறவினர்களால், நான்கில் ஒருவர் கோபப்படுவதாக தெரிவிக்கின்றனர். தொலைபேசியில் வரும் தேவையில்லாத அழைப்புகள், இன்டர்நெட் கோளாறுகள், சரியான பொருட்களை வினியோகிக்காதது, நிகழ்ச்சிகள் கடைசி நேரத்தில் ரத்தாவது, உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், பலருக்கும் கோபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை நேரத்தில் தான், குறிப்பாக திங்கட்கிழமைகளில், அலுவலக நேரங்களில், கோபம் அதிகமாக ஏற்படுவதாகவும், இந்த ஆய்வு தெரிவிக்கிறது.



No comments

Powered by Blogger.