நீர்கொழும்பில் கூட்டு உழ்ஹிய்யா
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூட்டு உழ்ஹிய்யா முறையில் நிறைவேற்றப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான மாடுகள் குர்பான் செய்யப்பட்டு நீர்கொழும்புப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சீராக விநியோகிக்கப்பட்டது.
எதுவித பேதங்களும் இன்றி ஜமாஅத்தாரின் ஒத்துழைப்புடன் கடந்த எட்டு வருடங்களாக இந்த கூட்டு உழ்ஹிய்யா நிறைவேற்றப்பட்டுவருவதாக நீர்கொழுப்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். அன்வர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்த இடம்பெயர்ந்து நீர்கொழும்பில் வாழும் வசதி படைத்த யாழ் வர்த்தகர்களும் இந்த கூட்டு உழிஹிய்யாவுக்கு தமது மாடுகளை வழங்கி ஒத்துழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment