குவைத் மன்னர் இலங்கை வருகிறார் - முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் பயிற்சி
குவைத் நாட்டின் அழைப்பின் பேரில் அண்மையில் அங்கு சென்றிருந்த முஸ்லிம் கவுன்சில் தலைவரும், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் அந்நாட்டு ஊடகத்துறை உயர் அதிகாரி சல்மான் சபா அலி சலீம்டம் விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய இலங்கை ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிக்க குவைத் அரசாங்கம் முன்வந்துள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களுக்கான தேவைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து குவைத் நாட்டு ஊடகத்துறை உயர் அதிகாரி சல்மான் சபா அலி சலீம்டம் கலந்துரையாடியதாக என்.எம்.அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.
சர்வதேச நாடொன்று இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு உதவ முன்வந்திருப்பது இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை குவைத் நாட்டின் மன்னரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பை அவர் ஏற்றுக்ககொண்டுள்ளார்.
அண்மையில் குவைத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு குவைத் மன்னருக்கு நேரடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை குவைத் மன்னரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு குவைத் மன்னருக்கு இலங்கைக்கு வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பை அனுப்பிவைக்கவுள்ளது.
Post a Comment