மொபைல் போனுக்காக பொய் சொல்லும் பிரித்தானியர் - சுவாரசிய தகவல்கள்..!
மொபைல் போனை மாடு விழுங்கி விட்டது; கடல் பறவை தூக்கி சென்று விட்டது, குரங்கு பறித்து கொண்டது என்பது போன்ற காரணங்களை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வாடிக்கையாளர்கள் தெரிவித்து உள்ளனர். மொபைல் போன் சேதமடைந்ததற்கான, நம்ப முடியாத காரணங்கள் கூறிய வாடிக்கையாளர்களை பற்றி, பிரிட்டன் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்று, செய்தி வெளியிட்டு உள்ளது.
"பசு ஒன்று கன்று ஈன்ற போது, அதற்கு உதவுவதற்காக, மொபைல் போனில் உள்ள, டார்ச்சை பயன்படுத்தினேன். அப்போது, மொபைல் போன், பசுவின் பின்புறம் வழியாக, அதன் வயிற்றுக்குள் சென்று விட்டது. பின்னர், சேதமடைந்த நிலையில் வெளியே வந்தது' என, விவசாயி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
"மகளின் பிறந்த நாளையொட்டி, "கேக்' தயாரித்த போது, தவறுதலாக மாவுக்குள் வைத்து அவித்து விட்டதால், போன் சேதமடைந்து விட்டது' என, ஒரு பெண் தெரிவித்து உள்ளார். கடற்கரையில் இருந்த போது, கடல் பறவை ஒன்று, மொபைல் போனை கொத்தி எடுத்து சென்று விட்டதாகவும், காரிலிருந்து குரங்கை படம் எடுத்த போது, அது பறித்து சென்று விட்டதாகவும் சில வாடிக்கையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கழிப்பறை மற்றும் கடலில் விழுந்து விட்டதாக ஒரு சிலர் குறிப்பிட்டு உள்ளனர். சாகச காட்சியில் நடித்த போது, கொழுந்து விட்டு எரிந்த தீயில் விழுந்து மொபைல் போன் சேதமடைந்ததாக, நடிகர் ஒருவர் தெரிவித்து உள்ளார். ஏமாற்றிய காதலனை, தாக்குவதற்காக, மொபைல் போனை வீசி எறிந்த போது, அதை பிடிக்க காதலன் தவறியதால், சுவரில் மோதி போன் சேதமடைந்ததை ஒரு பெண் உண்மையாக ஒப்புக்கொண்டு உள்ளார்.
Nama Nattula Latest Phonukku Ewwala Vilai Kurai ? Yean ?
ReplyDeleteUK Wasikkum Namadawangalum Insurance Claim pannivittu SL Phone Anuppi Vidranga ?
Awangalum Ethemathiri Poi Solranga.