அநுராதபுரம் பள்ளிவாசலுக்கு தீவைப்பு - முஸ்லிம் தலைமைகள் அறிக்கைவிட்டு பலனில்லை..!
அநுராதபுரத்தில் பள்ளிவாசலுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உயர் மட்டத்தினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தெரிவித்தார்.
இதுதொடர்பில் மக்காவின் தங்கியுள்ள அமைச்சர் பௌஸி, பிரதிமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், பள்ளிவாசல் தீவைப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலமே இவ்வாறான சம்பவங்களை ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென தான் முஸ்லிம் உயர் மட்டத்தினரிடம் சுட்டிக்காட்டினேன்.
அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சம்பவம் நடைபெற்றவுடன் அதுதொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அறிக்கைவிட்டு எந்தவித பயனும் இல்லை. அவர்கள் இவ்வாறான சம்பவங்கள் எதிர்லாத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கான செய்றபாடுகளில் குதிப்பதே ஆரோக்கியமாக அமையுமெனவும் என்.எம்.அமீன் மேலும் சுட்டிக்காட்டினார்.
evar kal ellam arikai veda matom than parliment il ulanar,,,
ReplyDelete