முஸ்லிம் மாணவன் ரோபோ உருவாக்கி சாதனை
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜவ்பர் முஹம்மட் பயாஸ் கழிவாக வீசப்படும் பேனை மூடிகளைப் பயன்படுத்தி மின்கலத்தில் இயங்கக்கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இவருக்கு இந்த எண்ணம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தோன்றியுள்ளது. இது ஆரம்பத்தில் தோல்வி ஏற்படுத்திய போதிலும் தொடர் முயற்சியினால் தனது எண்ணம் வெற்றியளித்துள்ளது கண்டு இவர் பெரு மகிழ்ச்சியடைந்துள்ளார்.
75 பேனை மூடிகளை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் பெற்று பழுதடைந்த பொம்மையொன்றிலிருந்து பெற்ற சிறிய மின் மோட்டார் ஒன்றை பயன்படுத்தி தனது பகுதித் தலைவர் ஏ.ஏ.மஜீட், ஆசிரியர்களான ஐ. எம். உவைஸ் மற்றும் ஏ.ஸி.எம். முனாஸ் ஆகியோரின் ஆலோசனையில் இந்த ரோபோவினை இந்த மாணவர் உருவாக்கியுள்ளார்.
எதிர்காலத்தில் இதனை ஆரம்பமாக கொண்டு பெரும் ஆக்க முயற்சியொன்றில் தான் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார். இவர் கல்வி விடயத்தில் அதிக அக்கறை செலுத்தும் வேளையில் ஓய்வு நேரங்களை தனது புத்தாக்க முயற்சிக்காக செலவிட்டு வருகின்றார். (TN)
Post a Comment